பட்டகத்தியால் ஸ்வீட் கடையை சூறையாடிய நபர் - சிதறும் பாட்டில்கள் - அதிர்ச்சி சிசிடிவி காட்சி

x

நெல்லையில் வசிக்கும் தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான ஸ்வீட் ஸ்டாலில், மர்ம நபர் ஒருவர் 3 அடி உயரமுள்ள வாளால், கடையை சூறையாடி உள்ளார். கடையில் பலகாரங்கள் இருந்த பாட்டில் மற்றும் கண்ணாடி ஷோகேஸ்களை சரமாரியாக அடித்து உடைத்துள்ளார்.

மேலும் அங்கிருந்த ஊழியர்களையும் வாளைக் காட்டி மிரட்டி சென்றுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார். சிசிடிவி காட்சிகளின் மூலம் வாளால் சூறையாடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்