சுரங்கப் பாதையா? குளமா? 2 மாதத்திற்கு மேல் தேங்கியுள்ள மழைநீர்... சுரங்கப் பாதை வேண்டாம்-ரயில்வே கேட் போதும்" - குமுறும் மக்கள்

x

நெல்லை மாவட்டம் அய்யனார்குளம் ரயில்வே தண்டவாளத்திற்கு கீழே சுரங்கப்பாதை ஒன்று இயங்கி வந்தது... மழை பெய்யும் போது அங்கு தண்ணீர் தேங்குவதும் பிறகு மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றுவதும் வாடிக்கையான நிலையில், திடீரென்று இப்பணி நிறுத்தப்பட்டதால் 2 மாதங்களாக அங்கு தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படாமல் உள்ளது... இதனால் இந்த பாதையை பயன்படுத்த முடியாத கிராம மக்கள் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றி அம்பை செல்கின்றனர். அவசர வேலைக்கு செல்லும்போது சிலர் ஆபத்தை கருத்தில் கொள்ளாமல் தங்கள் இருசக்கர வாகனங்களை தூக்கி சென்று தண்டவாளத்தை கடக்கின்றனர். இதனால் பொறுமையை இழந்த அப்பகுதி மக்கள் இந்த சுரங்கப் பாதையை அகற்றி விட்டு ரயில்வே கேட் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்