"வாசலில் கோலம் போட்டது குத்தமா..?" - காலணியால் அடிக்க பாய்ந்த பக்கத்து வீட்டு பெண் - பரபரப்பு வீடியோ

x

தெலங்கானாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பக்கத்து வீட்டினர் இருவருக்கும் இடையே நடந்த சண்டை தொடர்பான வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளி அன்று, ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு குடும்பம் தங்கள் வீட்டிற்கு வெளியே கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றியிருந்தனர். இந்த செயல் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் அவர்களோடு சண்டையிட்டார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற அந்த பெண், விளக்குகளை காலால் மிதித்ததோடு, காலணி கொண்டு அவர்களை தாக்க முற்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக விசாரணையில், இரு குடும்பத்தினருக்கும் இடையே ஆரம்பம் முதலே மனகசப்பு நீடித்து வந்தது தெரியவந்தது. தற்போது அந்த பெண்ணின் மீது ஹைதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்