நேரு நினைவு அருங்காட்சியகத்தின் பெயர் திடீர் மாற்றம்..!

x

டெல்லி தீன் மூர்த்தி வளாகத்தில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம், கடந்த 1964-ம் ஆண்டு, நாட்டின் முதல் பிரதமர் நேருவின் மறைவுக்கு பின்னர் நிறுவப்பட்டது. தன்னாட்சி அமைப்பாக நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகம் மற்றும் நூலகம், நவீன மற்றும் தற்கால இந்தியா பற்றி மேம்பட்ட ஆராய்ச்சியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நேருவின் பெயரில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தின் பெயரை மாற்ற காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், என்.எம்.எம்.எல் சொசைட்டியின் துணைத்தலைவரான பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில், வளாகத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயர், பிரதமர் அருங்காட்சியகம் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்