கரூரில் தொடரும் நீட் சோகம்... கரூர் மாணவி எடுத்த விபரீத முடிவு

x

கரூர் மாவட்டம் கொள்ளுதன்னி பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் - லட்சுமி தம்பதியின் 18 வயது மூத்த மகள் ப்ரீத்தி ஸ்ரீ. இவர், கடந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதியதில் குறைவான மதிப்பெண் பெற்றதால் எம்.பி.பி.எஸ்க்கு பதிலாக கால்நடை மருத்துவத்திற்கான கட்ஆப் கிடைத்துள்ளது. எனினும் மருத்துவப் படிப்பை கனவாகக் கொண்ட அந்த இளம்பெண், வேங்கம்பாடி கிராமத்தில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி, ஓராண்டாக நீட் தேர்வுக்கு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் மாணவி நீட் தேர்வு எழுதிய நிலையில், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், மாணவி ப்ரீத்தி ஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்