தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் - வெளியான அதிர்ச்சி தகவல்

x

நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்து உள்ளது.

2020ம் ஆண்டு தமிழகத்தில் 57 புள்ளி 44 சதவிகிதம் ஆகவும், 2021ம் ஆண்டு 54 புள்ளி 40 சதவிகிதம் ஆகவும் நீட் தேர்ச்சி விகிதம் இருந்தது.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் நீட் தேர்ச்சி விகிதம், 51 புள்ளி 30 சதவிகிதமாக சரிந்துள்ளது.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய போதும், தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கி உள்ளது.

நீட் தேர்ச்சி விகித பட்டியலில் கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 28-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்