நீட் தேர்வு முடிவுகள் 15-ம் தேதி வெளியீடு? |

x

நீட் தேர்வு முடிவுகள் வரும் 15-ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 7-ம் தேதி நடைபெற்றது. 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர். வழக்கமாக தேர்வு நடந்து 40 நாட்களுக்குள் முடிவுகள் வெளியாகும். அதன்படி, வரும் 10-ம் தேதியிலிருந்து 15-ஆம் தேதிக்குள் தேர்வு முடிவு வெளியாகலாம் என்றும், குறிப்பாக 15ம் தேதி தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்