அரசு மருத்துவமனை அருகில்...பிரபல உணவகத்தில்..கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சி..அதிகாரிகள் அதிரடி

x

நெல்லை அரசு மருத்துவமனை அருகே உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கிலோ கணக்கில் கெட்டுப்போன இறைச்சி மற்றும் உணவு பதார்த்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை மருத்துவமனைக்கு எதிரே உள்ள கடைகளில் தரமற்ற கெட்டுப் போன உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சசி தீபாவிற்கு புகார் வந்தது. இதனை அடுத்து இன்று உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் தலைமையில் அதிகாரிகள் உணவு விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கடையில் கெட்டுப்போன இறைச்சி 14 கிலோ இருப்பதை கண்டறிந்து அதை அழித்தனர். மற்றோர் கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் இரண்டு கிலோவும் உணவு பதார்த்தங்கள் பிளாஸ்டிக் பையில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, 10 கிலோ உணவு பதார்த்தங்கள் அழிக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்