"2024-ல் தேர்தல் வந்தால்.." -"மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி" - நயினார் நாகேந்திரன்

x

"2024-ல் தேர்தல் வந்தால்.." -"மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி" - நயினார் நாகேந்திரன்


அடுத்த ஆண்டிலோ அல்லது 2024-ஆம் ஆண்டிலோ தேர்தல் வந்தாலும், மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியமைக்கும் என்று பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழ் மொழிக்கு திமுக அரசு முடிவுரை எழுத முயற்சிப்பதாக கூறி, நெல்லை வண்ணாரப்பேட்டையில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நயினார் நாகேந்திரன், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக பேசும் திமுகதான், இலங்கையில் போர் நடந்தபோது ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்தது என்று குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்