நயன்- விக்கி குழந்தைகள் விவகாரம்"அப்படி செய்திருந்தால் அது தவறில்லை.."இயக்குநர் களஞ்சியம் பேட்டி

x

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகள் விவகாரம் சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பட்டிருப்பார்கள் என நம்புவதாக இயக்குநர் களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

சென்னை திருப்போரூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த களஞ்சியம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், டெஸ்டியூப் பேபி, வாடகை தாயின் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்வதோ தவறில்லை.சட்டத்தை மீறி செயல்படும் போது குற்றமாகிறது என்றார்.

இருப்பினும், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் சட்டபடியா? சட்டத்திற்கு புறம்பாக செய்திருக்கிறார்களா என்பது இன்னமும் முடிவாகவில்லை.

சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்பட்டிருப்பார்கள் என்பது என் நம்பிக்கை என களஞ்சியம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்