வடபழனி முருகன் கோயிலில் நவராத்திரி விழா - கெஜலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்

வடபழனி முருகன் கோயிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சக்தி கொலு விழாவின் 5ம் நாளான நேற்று அம்பாள் கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

பின், பக்தர்களின் கொலு பாட்டு கோலாகலமாக நடந்தது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு, நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com