சிறையில் இருந்து இன்று விடுதலையாகிறார் நவ்ஜோத் சிங் சித்து

x

பஞ்சாப் மாநிலம் பட்டியாலா சிறையில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து இன்று மாலை விடுதலையாகிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், குர்ணாம்சிங் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக கடந்த 1988 ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டது. இதில், நவ்ஜோத் சிங் சித்து நடத்திய தாக்குதலில், படுகாயமடைந்த குர்ணாம்சிங் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஹரியானா நீதிமன்றம் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நவ்ஜோத் சிங் சித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, சித்து, கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு பட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார். நன்னடத்தை அடிப்படையில் தண்டனை குறைப்பு பெற்று சித்து இன்று மாலை விடுதலையாகிறார். அவரை வரவேற்க, அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்