"அன்று ஹீரோ... இன்று வில்லன்.." - தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது..நடந்தது என்ன..?

x
  • தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

  • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராமச்சந்திரன்.
  • இவருக்கு கடந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்ட நிலையில், இவரது சகோதரர் பஞ்சாட்சரம் வருமான வரி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.
  • இவர், வருமான வரி தாக்கல் செய்ய வருபவர்களின் கணக்கை குறைவாக காண்பித்து பண மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டார்.
  • இந்த விவகாரத்தில், ஆசிரியர் ராமச்சந்திரனின் கணக்கில் 12 லட்ச ரூபாய் பணம் பரிமாற்றப்பட்டதாக எழுந்த புகாரில், ஆசிரியரை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர்.
  • இதில், ராமச்சந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள், விசாரணைக்காக 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். இதன் எதிரொலியாக ஆசிரியர் ராமச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்