தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகள்... பதக்கங்களை குவித்த அரசு பள்ளி மாணவர்கள்

x

தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகளில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர். தேசிய அளவிலான ஒலிம்பியாட் யோகா போட்டிகள் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் நடந்தது . இதில் 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் நான்கு மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களையும், 16 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவு மற்றும் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவு என இரண்டு குழுவினர் வெண்கல பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளனர். பதக்கம் வென்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்