சொல்லி அடித்த நாசா... சும்மா இல்ல 14 லட்சம் மைல் பயணம்... நிலவின் ரகசியதோடு வந்து பசிபிக்கில் விழுந்த ஓரியன்

x

நிலவை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம், பசுபிக் பெருங்கடலில் பத்திரமாக தரை இறங்கியது.

கடந்த மாதம் 16ஆம் தேதி, நாசா அனுப்பிய ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம், நவம்பர் 25ஆம் தேதி முதல் நிலவை சுற்றி ஆய்வு செய்த‌து. நிலாவை மிக அருகில் சென்று புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. இந்நிலையில், தனது பணிகளை முடித்துக் கொண்ட ஓரியன் விண்கலம், திட்டமிட்டபடி, நேற்றிரவு பசுபிக் பெருங்கடலில் பத்திரமாக தரையிறங்கியது. எதிர்காலத்தில் விண்வெளி வீர‌ர்களை அனுப்பவதற்கு தேவையான தகவல்களை சேகரிப்பதற்காக 14 லட்சம் மைல்கள் பயணித்த ஓரியன் விண்கலம் வீடு திரும்பியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்