ஈவு இரக்கமில்லாத ஆசிரியர் செயல்.. ஒரு பிஸ்கெட் பாக்கெட்டுக்காக... பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்!

x

நாமக்கல் மாவட்டத்திலுள்ள அரசு துவக்க பள்ளியில் பிஸ்கட்டை தூக்கிப்போட்டு மாணவனை சாப்பிட வைத்ததாக கூறி ஆசிரியர் மீது மாணவன் போலீசில் புகாரளித்துள்ளார்.

ராசிபுரம் அடுத்த போடிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் அரசுதுவக்க பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர் பள்ளியில் படிக்கும் மாணவர்களை திண்பண்டங்கள் வாங்க கடைக்கு அனுப்பியதாகவும், அப்போது ஆசிரியர்கள் கூறியவற்றை மாணவர்கள் சரியாக வாங்கிவரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியர் பிஸ்கட்டை தூக்கி போட்டு அதை மாணவர்களை சாப்பிட சொல்லி தரக்குறைவாக நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்