பள்ளி வளாகத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த பள்ளி காவலாளி.. வெளியான பகீர் தகவல் - நாமக்கல்லில் அதிர்ச்சி
- நாமக்கல் மாவட்டம், ஆர்.எஸ். பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் நடராஜ்.
- இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளி வளாக பகுதியில் ரத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
- அவரது சடலத்தை உடற்கூராய்வு செய்ததில், அவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.
- போலீஸ் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த பிரபு ராம், மணிகண்டன், மாணிக்கம் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
- இதில், பள்ளி வளாகத்தில் மூவரும் இணைந்து மது அருந்தியதை கண்டித்ததால், காவலாளி நடராஜை கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரிய வந்தது.
- இதையடுத்து, மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story
