விமர்சையாக நடை பெற்ற அறுபத்து மூவர் பெருவிழா - திரளான பக்தர்கள் வழிபாடு

x

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், கைலாசநாதர் கோவிலில் அறுபத்து மூவர் பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாமல் இருந்த‌து.

இந்நிலையில், கைலாசநாதர் கோயிலில், பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

அபிஷேகம் அலங்கார ஆராதனைகளுடன், கைலாய வாத்தியங்கள் முழங்க, நான்கு ரத வீதி வழியாக 63 நாயன்மார்கள் வீதி உலா சென்றனர். சிவனடியார்கள் தேவார திருவாசகப் பாடல்களை பாடி உடன் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்