எண்ணெய் கசிவால் நாகூர் கடலில் பாதிப்பு.. பைப் லைனில் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல தடை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

x
  • நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் மிதந்து சுற்றுச்சூழல் மாசடைந்தது.
  • உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் கடந்த நான்கு நாட்களாக சிபிசிஎல் ஆலை தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
  • இதனிடையே குழாயின் ஓட்டையை சிபிசிஎல் நிர்வாகம் நேற்று இரவு மீண்டும் சீரமைத்தது. இதனுடைய கச்சா எண்ணெய் குழாயை அகற்றக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் நான்காவது நாளாக ஈடுபட்டு வரும் நாகூர் பட்டினச்சேரி மீனவர்களை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று நேரில் சந்தித்தார்.
  • அப்போது மீனவர்களிடம் கூறிய ஆட்சியர், மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்