ஆடையின்றி சென்ற மனநலம் பாதித்த பெண்ணின் மானம் காத்த பெண் போலீஸ்

• நாகர்கோயிலில் சாலையோரம் ஆடையின்றி நடந்து சென்று கொண்டிருந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆடை போர்த்தி மானம் காத்த பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. • நாகர்கோவிலில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சந்திப்பில், சாலையோரம் ஆடையின்றி நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை யாரும் கண்டுகொள்ளவில்லை. • அப்போது, அந்த வழியாக வந்த பெண் போலீஸ் சரசுவதி ஓடோடிச் சென்று, அந்த பெண்ணின் உடலில் ஆடை ஒன்றை போர்த்தி அவரது மானம் காத்து, அழைத்துச் சென்றார். • இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com