இந்த பொறப்புதான்.. நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது..!இத்தனை வகை பலகாரங்களா?

x

வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் கிராமத்தில் பனங்கிழங்கை மூலப்பொருளாக கொண்டு கார்த்திகேயன் என்ற இளைஞர் அறிமுகம் செய்து வரும் பலகாரங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் பனங்கிழங்கை கொண்டு கேக் அல்வா, பர்பி, சாக்லெட் செய்து அசத்துகிறார். கூடவே அதிரசம், முறுக்கு, பாயாசம், சீடை , கெட்டி உருண்டை போன்ற பாரம்பரிய பலகாரங்களையும் பனங்கிழங்கு கொண்டு தயார் செய்து வருகிறார். பனங்கிழங்கு கொண்டு தயாராகும் சாக்லெட் ஒன்று ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ஒரு கிலோ பனங்கிழங்கு பர்பி 400 ரூபாய்க்கும், அல்வா 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்