"கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்கிறார்கள்" - குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

x
  • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்கும் லோடுமேன்களை போலீசிடம் பிடித்து ஒப்படையுங்கள் என்று விவசாயிகளிடம் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டார்.
  • நாகப்பட்டினத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில், நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர் கீழையூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்
  • . பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
  • ப்போது, பணம் கேட்கும் லோடுமேன்களிடம் லஞ்சம் கொடுக்காமல், அவர்களை பிடித்து போலீஸிடம் ஒப்படையுங்கள் என்று ஆட்சியர் அருண் தம்புராஜ் கேட்டுக் கொண்டார்.
  • சில விவசாயிகள் தங்கள் தேவை கருதி லோடுமேன்களுக்கு லஞ்சம் கொடுத்து ஊக்குவிப்பதாகவும் ஆட்சியர் கூறினார்.
  • இதனால், கூட்டத்துக்கு வந்த விவசாயிகள் மத்தியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்