மருமகனை கொன்று நாடகமாடிய மாமனார்... - வசமாக சிக்க வைத்த ஆடியோ

x

மதுரை மாவட்டம் பரவையை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மருமகன் நாகபாண்டி. திருமணம் முடிந்ததிலிருந்தே தன் மாமனாரின் வீட்டிலேயே நாகபாண்டி தங்கி வந்திருக்கிறார். அவ்வப்போது மதுபோதையில் மனைவியிடம் சண்டையிடும் போது, அவரது மாமனார் நாகபாண்டியை கண்டித்துள்ளார். இந்நிலையில் , கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்பட்ட இதே போன்ற தகராறில், மாமனார் இரும்பு கம்பியை கொண்டு தாக்கியதில் நாகபாண்டி உயிரிழந்துள்ளார். ஆனால், நாகபாண்டி மது போதையில் மாடியிலிருந்து விழுந்து மரணித்ததாக அவரது மாமனார் கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த நாகபாண்டியின் சகோதரி, தன் தம்பி இறப்பதற்கு முன் தனக்கு அனுப்பிய ஆடியோவுடன் சென்று போலீசாரிடம் புகாரளித்தார். அந்த ஆடியோவில், தன் மாமனார் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னை காப்பாற்றுமாறும் நாகபாண்டி கெஞ்சியது பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் அவரது மாமனாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்