ஓசியில் மது கேட்டு தகராறு... தரமறுத்த பார் உரிமையாளரின் வீட்டில் மதுப்பிரியர்கள் அரங்கேற்றிய வெறிச்செயல்
- நாகை மாவட்டம் தேவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். பார் உரிமையாளரான இவர், டாஸ்மாக் கடையில் கத்தியை காட்டி மிரட்டி ஓசியில் மது கேட்ட 3 பேரை தட்டிக் கேட்டுள்ளார்.
- இதனால் ஓசியில் மது கேட்ட அஜித், புகழேந்திரன் மற்றும் முருகையன் ஆகியோருக்கும் பாஸ்கருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
- இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் போதை தலைக்கேறிய நிலையில், நள்ளிரவில் பாஸ்கரின் வீட்டில் பெட்ரோல் குண்டினை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
- இதில் வீட்டின் முன்புறம் படுத்திருந்த பாஸ்கரின் மாமனார் பாலச்சுந்தரம் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நிலையில், வீட்டிலிருந்தவர்கள் தீயை உடனடியாக அணைத்தனர்.
- இந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆய்வு செய்த போலீசார், பெட்ரோல் குண்டு வீசிய அஜித், புகநேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
