ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி தீட்சிதர்கள் வாக்குவாதம்.. நடராஜர் கோவிலில் பரபரப்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உணவு இடை வேளை முடிந்து மீண்டும் ஆய்வுக்கு சென்ற இந்து அறநிலையத்துறை...
x

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உணவு இடை வேளை முடிந்து மீண்டும் ஆய்வுக்கு சென்ற இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை தீட்சிதர்கள் வழக்கறிஞர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்து அறநிலைய துறை அதிகாரிகள் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு செய்ய வந்தனர். இதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்ததையடுத்து கடலூர் மாவட்ட அறநிலைய துறை துணை ஆணையர் ஜோதி பழனி, திருக்கோவில் இணை ஆணையர் நடராஜ் மாவட்ட வளர்ச்சி அலுவலர் சுகுமார் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் 3 மணி நேரத்திற்கும் மேலாக கோயில் வளாகத்தில் காத்திருந்தனர். கோயில் நடை 1 மணிக்கு அடைக்கப்பட்ட நிலையில், கோயிலை விட்டு வெளியேறிய அதிகாரிகள் மீண்டும் 5 மணிக்கு வந்தனர். அப்போது தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் ஆய்வு பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்