மதுரையில் பூட்டிக் கிடந்த வீட்டில் வெடித்த மர்ம பொருள் - பீதியில் அக்கம்பக்கத்தினர்

x

மதுரையில், பூட்டிக் கிடந்த வீட்டில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை கரிமேடு பகுதியில் உள்ள வாடகை வீட்டில் அஜித்குமார் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு இவரது வீட்டில் இருந்து திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் அளித்த தகவலின்பேரில் வந்த போலீசார், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மர்ம பொருள் வெடித்து, அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. போலீசார் நடத்திய விசாரணையில், அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 நாட்களாக வீட்டில் இல்லை என்பது தெரியவந்தது. அவரது தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியாத நிலையில், வெடித்தது நாட்டு வெடிகுண்டா? அல்லது வேறு ஏதேனும் பொருளா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்