பாஜக தொண்டர்கள் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்.. 7 பேருக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி சம்பவம்

மேற்கு வங்க மாநிலம் பகவான்பூர் பகுதியில் போலீசார் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்ற பாஜக தொண்டர்கள் மீது முகமூடி அணிந்தமர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இத்தாக்குதல் சம்பவத்தில் பாஜக தொண்டர்கள் 7 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலில் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த குண்டர்களின் பங்கு உள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com