மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் மர்ம நபர்? - பதற்றத்தில் மேற்கு வங்கம்
மம்தா பானர்ஜியின் வீட்டிற்குள் மர்ம நபர்? - பதற்றத்தில் மேற்கு வங்கம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இல்லத்திற்குள் துப்பாக்கி, ஆயுதங்களுடன் நுழைய முயன்ற நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.ஷேக் நூர் ஆலம் என்ற நபர் மம்தா பானர்ஜியின் இல்லம் அமைந்திருக்கக் கூடிய சந்து பகுதியில் கத்தி, துப்பாக்கி மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் ஆகியவற்றுடன் நுழைய முயன்றுள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த நபரிடம் ஏராளமான அமைப்புகளின் அடையாள அட்டைகள் இருந்ததோடு காரில் காவல்துறை என ஸ்டிக்கர் ஒட்டியும் பயணம் செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
Next Story
