சுடுகாட்டில் கிடந்த மர்ம பார்சல்.. துர்நாற்றம் வீசியதால் பதற்றம் -போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

நீலகிரி அருகே சுடுகாட்டில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டிருந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். உதகை அருகே எமரால்டு பகுதியில் இருக்கும் சுடுகாட்டில், பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். கைப்பற்றப்பட்ட சடலம் 60 வயது உடைய முதியவர் என்பதும், 6 மாதத்திற்கு முன்பு உடலை கொண்டு வந்து அங்கு போட்டதும் தெரிய வந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com