இரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றும் மர்ம நபர்கள்..கதவை உடைத்து மிரட்டல்..பீதியில் ராமநாதபுரம் மக்கள்

x

சாயல்குடி பகுதியில், பயங்கர ஆயுதங்களுடன் தினந்தோறும் வலம்வரும் மர்ம கும்பலால், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் உள்ள தனியார் விடுதியின் கதவை உடைத்து, பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மர்ம கும்பல் பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பயங்கர ஆயுதங்களுடன் வலம்வரும் மர்ம கும்பல் மீது போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்