ஜமீஷா வீட்டில் இருந்த மர்ம பொருட்கள்..அரபி மொழியில் இருந்த வாசகம்.. கோவை கார் வெடிப்பு சம்பவம்

x

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமீஷா முபின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில சந்தேகத்திற்குரிய குறிப்புகளை வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில், போலீசார் கைப்பற்றிய ஆவணங்களில் ஒரு சில பகுதிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் முபீன் வீட்டை காவல் துறை சோதனையிட்ட போது சில சந்தேகத்திற்குரிய குறிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த குறிப்புகளில் ஹதீஸ் குறித்தும், ஜிகாத் குறித்தும் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ஐ.எஸ் அமைப்பு தொடர்பாக அரபி மொழியில் சில வாசகங்களும் சிலேட்டில் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக் குறிப்புகள், ஆவணங்கள் அனைத்தையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்