டான்ஸ் பார்த்து கொண்டிருந்த மக்கள் - தலை மேல் வந்து விழுந்த குண்டு

x

டான்ஸ் பார்த்து கொண்டிருந்த மக்கள் - தலை மேல் வந்து விழுந்த குண்டு

கலை நிகழ்ச்சியின் போது மியான்மர் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாநிலமான கச்சினில், கிளர்ச்சியாளர்களின் "கச்சின் சுதந்திர அமைப்பு" நடத்திய இசை நிகழ்ச்சியின் போது மியான்மர் ராணுவம் வாழ்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் இசைக்கலைஞர்கள், பாடகர்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆங் சான் சூகியின் அரசாங்கத்திடம் இருந்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும். இந்த தாக்குதலுக்கு ஐநா தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்