"என் பொண்ண 35 துண்டா வெட்டுன அவ காதலன 70 துண்டா வெட்டி வீசணும்" - உச்சக்கட்ட ஆத்திரத்தில் தந்தை ஆவேசம்

ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த அப்தாபை 70 துண்டுகளாக வெட்டி கொலை செய்ய வேண்டுமென, மகளை இழந்த ஆதங்கத்தில் ஷ்ரத்தாவின் தந்தை கூறியுள்ளார்.

டெல்லியில் லிவ் இன் உறவில் இருந்த ஷ்ரத்தா வாக்கர் என்ற இளம்பெண்ணை அப்தாப் என்பவர், கொலை செய்ததுடன் உடலை 35 துண்டுகளாக வெட்டி, வனப்பகுதியில் வீச்சிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஷ்ரத்தாவின் இழப்பு குறித்து பேசிய அவரது தந்தை விகாஸ் வாக்கர், தன் மகளை 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்த அப்தாபை 70 துண்டுகளாக வெட்டி கொலை செய்ய வேண்டும் என்றும், அந்த உடலை இந்தியாவுக்கு வெளியே வீச வேண்டும் என்றும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com