இந்து கோயிலில் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமியர்கள்.. ஹிமாச்சலில் நெகிழ்ச்சி சம்பவம்

ஹிமாச்சலில் இந்து கோயிலில் இஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற திருமணம், மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஹிமாச்சலில் உள்ள ராம்பூர் நகரில் உள்ள சத்தியநாராயணன் கோயிலில் வைத்து இஸ்லாமிய தம்பதியருக்கு இஸ்லாம் முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய இரு மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். கோயில் வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வரும் நிலையில், இந்து, இஸ்லாம் மக்களின் ஒற்றுமையை பலப்படுத்தும் விதமாக இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோயில் விதிமுறைகளுக்கு உட்பட்டு சைவ உணவே பரிமாறப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com