திருத்தணியில் நேருக்கு நேர் 'முருகன் - அம்பேத்கர்' ஊர்வலம்..மாறி மாறி தாக்கிக் கொண்ட இளைஞர்கள்..அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்

x
  • திருத்தணி அருகே முருகப்பெருமான் மற்றும் அம்பேத்கர் ஊர்வலத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது..
  • திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரிப் பேட்டை பகுதியில், அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரு தரப்பினர் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
  • இதற்கான ஊர்வலத்தின்போது இரு தரப்பினரும் நேருக்கு நேர் வந்த நிலையில், யார் முதலில் செல்வது என்பதில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
  • ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், மாறி மாறி தாக்கிக் கொண்டதாக தெரிகிறது.
  • இதில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், இளைஞர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
  • இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோதலில் ஈடுபட்டதாக ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
  • இதனால் பதற்றமான சூழல் நிலவுவதால் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்