15 வயதில் கொலை... டானாக மாறிய வாலிபர்... பாழுங்கிணற்றில் எலும்பு கூடாக கண்டெடுப்பு....

x


சுழன்று கொண்டிருக்கும் காற்றலைகளுக்கு நடுவே காவல்துறையும், தீயணைப்பு துறையும் ஒன்று சேர்ந்து, ஒரு பாழுங்கிணற்றை ஜேசிபி இயந்திரத்தை வைத்து துளாவி கொண்டிருந்தது.

கயிற்றை பிடித்து உள்ளே இறங்கிய மீட்புபடை வீரர் ஒருவர் சற்று நேரத்தில் ஒரு சாக்கு மூட்டையுடன் மேலே வந்தார்.

போலீசாரின் பல மணி நேர தேடுதலின் பலன் அந்த சாக்கு மூட்டைக்குள் தான் முடங்கி இருந்தது.

உள்ளே இருந்த அனைத்தும் மனித எலும்புகூட்டின் மிச்ச சொச்சங்கள்.

இந்த எச்சங்களின் சொந்தக்காரர் யார்...? நடந்தது என்ன..? என்பதை தெரிந்து கொள்ள கண்டமனூர் காவல்துறையினரின் கோப்புகளை புரட்டினோம்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்துள்ளது கண்டமனூர் காவல் நிலையம். இங்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான சீமான் என்ற இளைஞரை காணவில்லை என ஒரு புகார் வந்திருக்கிறது.சத்தியப்ரியா இன்ஸ்பெக்டர்..00;10-00;௨௨

உடனே காணாமல் போன சீமானின் தகவல்களை அலசி ஆராய்ந்திருக்கிறது கண்டமனூர் காவல் ஆய்வாளர் சத்தியபிரியா தலைமலையிலான குழு. அப்போது தான் பெயருக்கு ஏற்றார்போல் சீமான் ஏரியாவுக்குள் சீமானாகவே வளம் வர நினைத்த ஒரு பலே ரவுடி என தெரிந்திருக்கிறது.

ஆம்.... சீமான் பள்ளி பருவத்திலேயே உடன் படித்த மாணவனை சுத்தியலால் அடித்து கொலை செய்திருக்கிறார். அன்று முதல் பள்ளிக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர ரவுடியாக உருமாறி இருக்கிறார். ஏரியாவுக்குள் பிரச்சனை செய்வது, குடித்து விட்டு பெரியவர்களிடம் வம்பிழுப்பது, பள்ளி மாணவர்களை அடித்து மாஸ்காட்டுவது என சண்டி தனத்தை காட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் தான் திடீரென சீமான் காணாமல் போயிருக்கிறார். சீமான் எங்கே சென்றார்...? முன்விரோதத்தில் யாரேனும் கொலை செய்து விட்டார்களா...? என பல கோணத்தில் விசாரனை விரிந்திருக்கிறது.

சீமானுக்கு தொடர்புடைய ஒருவரையும் விடாமல் போலீசார் விசாரனை வலையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். 6 மாதங்களாக நடந்த தொடர் விசாரனையில் சஞ்சீவிகுமார் என்ற இளைஞரின் மூலம் வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.

ஆம்.... சஞ்சீவ்குமார் வேறு யாருமல்ல சீமானின் நண்பன் தான்.... சிறு சிறு சண்டைகளுக்கும், பஞ்சாயத்திற்கும் சீமானின் வலது கையாக நின்றவர். தினமும் இரவில் அட்டி போட்டு மது குடிப்பது, ஊருக்குள் கெத்து காட்டுவது தான் இவர்களது அன்றாட தொழில்.

தனக்கு கீழே ஒரு பெரும் படை இருப்பதால் கர்வம் கொண்ட சீமான் தன்னை ஒரு டானாகவே நினைத்திருக்கிறார்.

"நான் தான் உங்களுக்கெல்லாம் தலைவன், நான் சொல்வதை தான் கேட்க வேண்டும்" என சொல்லி நண்பர்களை அடியாட்களாக நடத்தி உள்ளார்.

இவை எல்லாம் சஞ்சீவ்குமாருக்கும் மற்ற நண்பர்களுக்கும் வெறுப்பை உண்டாக்கி உள்ளது. இதனால் சீமானுடனான சவகாசத்தை முறித்து தனியாக அட்டி போட தொடங்கி இருக்கிறார்கள்.

இதனை கண்டு ஆத்திரமடைந்த சீமான், சம்பவம் நடந்த அன்று இரவு அரிவாளுடன் நண்பர்கள் அட்டி போடும் இடத்திற்கு சென்றுள்ளார். நண்பர்கள் என்றும் பாராமல், அனைவரையும் தகாத வார்த்தைகளால் வசைபாடி இருக்கிறார்.

"என்னை விட்டு தனியாக சென்றால் உங்களின் உயிரை பறித்துவிடுவேன்" என அரிவாளால் மிரட்டல் விடுத்திருக்கிறார். மேலும் சில நண்பர்களை வெட்ட முயற்சித்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட சஞ்சீவ்குமார், சீமான் அனைவரையும் வெட்டி விடுவானோ என்ற அச்சத்தில், பீர் பாட்டிலால் சீமானின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார்.

அந்த தாக்குதலில் பேச்சு மூச்சின்றி நிலைகுலைந்து விழுந்திருக்கிறார் சீமான். தண்ணீர் தெளித்து பார்த்தும் சீமான் எழும்பாததால், அவர் இறந்து விட்டார் என்று நினைத்தவர்கள், உடலை யாருக்கும் தெரியாமல் மறைக்க திட்டம்போட்டுள்ளனர்.

உடனே இரவோடு இரவாக வேலாயுதபுரம் பகுதியில் உள்ள இந்த பழுங்கிணற்றில் வீசி விட்டு தப்பி சென்றது விசாரனையில் தெரியவந்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சஞ்சீவ்குமார், சந்தானகுமார், பிரகாஷ், லோகநாதன் உட்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்