"நாவடக்கம் தேவை" - குஷ்பு குறித்து முரசொலி கடும் விமர்சனம்

x

இதுகுறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையில், பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு, ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தை பற்றி பேசாமல், தனது வாய்த்துடுக்கை காண்பித்துள்ளதாக விமர்சித்துள்ளது. சிலிண்டர் விலை, பெட்ரோல்-டீசல் விலை உயரும் போதெல்லாம் எரியாத வயிறு, பால் விலை உயர்வை கண்டு மட்டும் எரிகிறதா என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. பாஜக பெண் நிர்வாகிகள்குறித்து அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் குறித்து, வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தும் குஷ்பு, எச்.ராஜா பேசியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துவாரா எனவும் திமுக கேள்வி எழுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்