8 மாதங்களாக வழங்கப்படாத ஊதியம்... நகராட்சி ஊழியர் எடுத்த விபரீத முடிவு

x

8 மாதங்களாக வழங்கப்படாத ஊதியம்... நகராட்சி ஊழியர் எடுத்த விபரீத முடிவு


திருச்செந்தூர் அருகே நடுநாலுமூலைகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரவிகுமார். இவர் திருச்செந்தூர் நகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பிளம்பிங் வேலை பார்த்து வந்தார். இதனிடையே கடந்த 8 மாதங்களாக, ரவிகுமாருக்கு ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, ரவிகுமார் புதுகாலனியில் அமைந்துள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, ரவிகுமாருக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், அவரது குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனக் கூறி அவரது உறவினர்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் நிலுவைத் தொகையை வரும் 9-ஆம் தேதிக்குள் வழங்குவதாகவும், அவரது மூத்த மகளுக்கு தற்காலிகமாக பணி வழங்கி பின்னர் அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்