நகராட்சி ஆணையாளர் பெயரில் மோசடி - போலி கையொப்பமிட்டு கடைகளில் அபராதம்

x

திருப்பத்தூரில் நகராட்சி பணியாளர்கள், ஆணையாளர் பெயரில் போலி கையொப்பமிட்டு கடைகளில் அபராதம் விதித்து பணம் வசூல் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நகராட்சி பணியாளர்கள் மூலம் முக கவசம் அணியாதவர்கள் மற்றும் அனுமதியின்றி கடை திறப்பவர்களிடத்தில் அபராதம் விதிப்பதற்காக ரசீது புத்தகங்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது..

இந்நிலையில், சிலர் அந்த புத்தகத்தை பயன்படுத்தி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொள்வதாக கூறி 200 முதல் 5000 வரை அபராதம் விதித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் தெரிவிக்கையில், அந்த ரசீதில் இடம் பெற்றிருக்கக்கூடிய கையொப்பம் தன்னுடையது இல்லையென்றும், இதில் ஈடுபட்டவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்