மண்ணில் புதைந்திருந்த மம்மி - அதிர்ச்சி காட்சிகள்

x

மண்ணில் புதைந்திருந்த 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மி பெருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெருவின் தலைநகரான லிமா அருகே சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குப்பிகள், சோளம், கோகோ இலைகள் மற்றும் விதைகள் ஆகியவையும் அந்த உடலோடு புதைக்கப்பட்டிருந்தன. கிமு ஆயிரத்து 500 மற்றும் ஆயிரத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் லிமா பள்ளத்தாக்குகளில் உருவான மஞ்சாய் கலாச்சாரத்தைச் சேர்ந்த மம்மியா இருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்