டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி.. முதல் பெண்கள் ப்ரீமியர் லீக் கோப்பையை தட்டித்தூக்கிய மும்பை இந்தியன்ஸ்

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
  • மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி - மும்பை அணிகள் மோதின.
  • இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மெக் லானிங் தலைமையிலான டெல்லி அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
  • மும்பை அணி தரப்பில் இஸ்ஸி வோங் மற்றும் ஹேலி மேத்யூஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
  • பின்னர் 132 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் தொடக்க வீராங்கனைகள் ஹேலி மேத்யூஸ் 13 ரன்களுக்கும், யாஸ்திகா 4 ரன்களுக்கும் வெளியேறினர்.
  • கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்-நாட் ஸ்கிவர் ஜோடி நிலைத்து நின்று ஆடியது.
  • ஹர்மன்ப்ரீத் கவுர் 37 ரன்களில் ரன்-அவுட் ஆன நிலையில், நாட் ஸ்கிவர் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரின் 3வது பந்தில் இலக்கை எட்டிய மும்பை, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • இதன்மூலம் முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி சாதனை படைத்து உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்