ஐபிஎல் Playoff-ல் 4ம் இடத்துக்கு அடித்து கொள்ளும் மும்பை, RCB, RR - உள்ளே செல்ல யாருக்கு அதிக வாய்ப்பு?

x

இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ அணிகள் கால்பதித்துவிட்டன.

எஞ்சி இருப்பது ஒரு இடம்... அதற்கு பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான் அணிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது.

14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் பெங்களூருவிற்கு பிளே-ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் கடைசி லீக் போட்டியில் குஜராத்தை, டீசன்ட்டான ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் பெங்களூருவின் பிளே-ஆஃப் கனவு நனவாகும்... ஒருவேளை தோல்வி அடைந்தாலும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு மும்பை ஹைதராபாத்துடன் தோற்றிருக்க வேண்டும். மேலும் குஜராத்துடனான தோல்வி வித்தியாசம் 5 ரன்களுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

5 முறை சாம்பியனான மும்பை, பிளே-ஆஃப் சுற்றுக்குள் முன்னேற முட்டி மோதி காத்திருக்கிறது. ஆனால் நெகட்டிவ் ரன் ரேட்டில் இருப்பது மும்பைக்கு பெரும் சிக்கல்... பிளே-ஆஃப் சுற்றுக்கு மும்பை முன்னேற வேண்டும் என்றால், இன்று மாலை முதலில் ஹைதராபாத்தை வெல்ல வேண்டும்... வெறும் வெற்றி மட்டும் போதாது குறைந்தபட்சம் எக்ஸ் பிளஸ் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றால்தான் வாய்ப்பு... இங்கே எக்ஸ் என்பது குஜராத்தை பெங்களூரு வென்றால் ஏற்படும் ரன் வித்தியாசம். இறுதி லீக் போட்டியில் பெங்களூரு குஜராத்திடம் தோற்றால் மும்பையின் பிளே-ஆஃப் கனவு பலிக்கும். ஒருவேளை பெங்களூரு நல்ல ரன் ரேட்டில் வென்றால், மும்பை நடையைக் கட்ட வேண்டியதுதான்..

14 புள்ளிகள் பெற்றுள்ள ராஜஸ்தானின் பிளே-ஆஃப் வாய்ப்பு அவர்களின் கரங்களில் இல்லை... குஜராத் மற்றும் ஹைதராபாத்தை நம்பி ராஜஸ்தான் உள்ளது. இவ்விரு அணிகளும் இன்று வெற்றி பெற்றால் ராஜஸ்தானுக்கு பிளே-ஆஃப் அதிர்ஷ்டம் அடிக்கும்...

எஞ்சி இருக்கும் ஒரு இடத்திற்கு மூன்று அணிகள் இடையே போட்டி மூண்டுள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழையும் கடைசி அணி எது என்பதற்கு இன்று இரவு விடை தெரிந்துவிடும்.


Next Story

மேலும் செய்திகள்