"நில அளவீடு செய்யச் சென்ற பெண் வி.ஏ.ஓ".. "மும்பையிலிருந்து வந்த கொலை மிரட்டல்" - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

x
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நில அளவீடு செய்யச் சென்ற பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
  • அரும்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் அலுவலகம் அமைக்க, புறம்போக்கு இடங்களை அளவீடு செய்ய, திருக்கோவிலூர் வருவாய் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
  • இதன் அடிப்படையில், அரும்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் ஜீவா மற்றும் நில அளவையர் ஏழுமலை ஆகியோர், நிலங்களை அளவீடு செய்தனர்.
  • இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • மேலும், ஜீவாவுக்கு மும்பையில் இருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
  • விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், சக்கரையாஸ் ஷெட்டி என்பது தெரியவந்தது.
  • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்