இனி சென்னை வரைக்கும் செல்ல வேண்டாம்.. வரப்போகிரது மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் - தமிழக அரசு எடுத்த முடிவு - மக்கள் ஹாப்பி

x

சென்னை புறநகரில் உள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக புறநகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். விபத்து மற்றும் மாரடைப்புக்கு உயர் சிகிச்சை தேவைப்படும் போது,

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பப்படுகின்றனர். இவ்வாறு அனுப்பப்படும் போது போக்குவரத்து நெரிசலில் ‌சிக்கி பலர் உயிரிழப்பதால், அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து,

தற்போது, தமிழக அரசு, குரோம்பேட்டையில் செயல்படும் தாம்பரம் அரசு மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியுள்ளது.

புதிதாக அமைக்கப்படவுள்ள‌ செங்கல்பட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை110 கோடி ரூபாயில் 500 படுக்கை வசதிகளுடன் 5 ஏக்கரில் அமைக்கப்படவுள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல், தாம்பரம் அரசு மருத்துவமனையும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவாக மாற்றப்படவுள்ளது. இதனிடையே, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மேம்படுத்த தமிழக சுகாதாரத் துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு புறநகர் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்