முலாயம் சிங் யாதவ் காலமானார்
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் காலமானார்.
அவருக்கு வயது 82/முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு.
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கடந்த 2ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த முலாயம் சிங் யாதவ் தற்போது உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்தார் முலாயம் சிங் யாதவ்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் முலாயம் சிங் யாதவ் பதவி வகித்துள்ளார்.
