பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் வழக்கறிஞர் முபாரக் கைது

x

கேரளாவில் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பச் சேர்ந்தவரும், வழக்கறிஞருமான முபாரக்கை என்ஐஏ போலீசார் கைது செய்தனர். கேரளாவில் திருவனந்தபுரம், ஆலப்புழா, மலப்புரம், எர்ணாகுளம் உள்பட 56 இடங்களில் என்ஐஏ அமைப்பினர் இரு தினங்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக, எடவனக்காட்டைச் சேர்ந்த முபாரக் என்பவரை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து கோடாரி, வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்