எங்கேயும் எப்போதும் எம்.எஸ்.வி! சந்தோஷம்... சங்கீதம்... அன்பு நடமாடும் கலைக்கூடம், எம்.எஸ்.வி.

x

இசை உலகின் இமயம், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்தாளில் அவர் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்...

என்று கேட்டாலும் உருக செய்யும் அவரது மெல்லிசை பாடல்கள் பல...

இதய சிம்மாசனத்தில் இன்னிசையால் வீற்றிருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன் 1928 ஆம் ஆண்டு இதே நாளில் பாலக்காட்டில் பிறந்தவர். இசை, ஆர்வம், ஞானம் உடனிருக்க 13 வயதில் இசைக்கச்சேரி நடத்தியவர். 3 வயதில் தந்தையை இழந்தவர், சோதனைகளை கடந்து இசையில் சாதித்தவர். இசைமேதை சி. ஆர்.சுப்பராமன் மறைவை அடுத்து பணம் திரைப்படத்தில் ராமமூர்த்தியும் சேர்ந்து இசையமைக்க தொடங்கினார் எம்.எஸ்.வி...

கிளாசிக் ஹிட்ஸ்களால் இரட்டை இசையமைப்பாளர்கள் மெல்லிசை மன்னர்களானர்...

அவரது தெய்வீக பாடல்கள்... அப்படியே கேட்போரை பக்தி பரவசமாக்கும்...

பாடல்களில் வரிகளுக்கு இடையே அவரது இசை விளையாடல் கேட்போரை இனிக்க செய்யும்

காதல் பாடல்களில் அத்தனை ரசனையையும் இசை பேசும்..எவ்வளவு வெரைட்டிகளில் காதல் பாடல் கொடுத்தாலும் ஹம்மிங்கில் சபாஸ் போட செய்வார்...

கண்ணதாசனும் எம்.எஸ்.வி.யும் இணைந்துவிட்டால் ஹிட்தான்... தத்துவ பாடல்கள் தனிரகம்...

அவரது இசையிலான பாடல்கள் என்று கேட்டாலும் பாசமும் தந்தும்ப செய்யும்

இசையில் மட்டுமல்ல.. சில படங்களில் தோன்றிருந்தாலும் நடிப்பிலும் ரசிக்க செய்தவர்

90-ஸ் கிட்ஸ்களின் மேடைகளை துள்ளல் வேகத்தில் அலங்கரித்தது அவரது குரலே

இசை சாம்ராஜ்யம் நடத்திய இசை ஆத்மா 2015 ஜூலை 14-ல் நம்மைவிட்டு பிரிந்துச் சென்றார்... இசையோடு இறுதி மூச்சு வரை வாந்த எம்.எஸ்.வி எங்கேயும்... எப்போதும்... இசை உலகின் இமயம்தான்...


Next Story

மேலும் செய்திகள்