நடமாடும் தக்காளி வாகனம்...சென்னை மக்கள் ஹேப்பி..!

x

சென்னையில் நாளை முதல் 2 நடமாடும் வாகனங்கள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என தோட்டக்கலைத்துறை தெரிவித்து உள்ளது. செம்மொழி பூங்காவில் நாளை நாடமாடும் வாகனம் மூலம் முதற்கட்டமாக 100 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும், மாதவரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு நடமாடும் வாகனம் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு கிலோ தக்காளி 65 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் என்றும், மற்ற காய்கறிகளையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்