ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

x

ஒசாகா மாகாணத்தில் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை, 83 கோடி ரூபாய் முதலீட்டில், 53 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் இயக்குனர் கென் பாண்டோவும், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விஷ்ணுவும் கையெழுத்திட்டனர். அப்போது, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்