பெண் குழந்தைகளை தோளில் சுமந்து வந்த தாய் மாமன்கள் - விமர்சையாக நடந்த பொன்னூஞ்சல் திருவிழா

x

திருப்பூர் மாவட்டம் சங்கரண்டாம்பாளையம் கிராமத்தில், பொன்னூஞ்சல் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. தாய் மாமனின் உறவையும், பெண் குழந்தைகளின் தெய்வீக தன்மையையும் போற்றும் வகையில் இந்த பொன்னூஞ்சல் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த விழா காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. விழாவில், குடும்பத்தில் முதலாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு பட்டாடைகள், அணிகலன்கள் அணிவித்து, சீர்வரிசைகளுடன் தாய் மாமன் தோளில் சுமந்து வந்து, ஊஞ்சலில் ஆட வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்